கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில், கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. இந்தப் படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா எனத் தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளில் நடித்து அசத்தி வரும் நயன்தாராவுக்கு இந்தப் படம் ஒரு மைல் கல்லாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர். படத்தின் டீஸரை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டுள்ளனர்.

சர்ச்சைகளையும் அதே சமயம் அதிகளவு கவனம் பெற்ற குரும்படங்களான ‘லட்சுமி’மற்றும் ‘மா’ ஆகியவற்றை இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் ஜெயபிரகாஷ், கலையரசன், யோகிபாபு, லீலாவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா பவானி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் வித்யாசமனா கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவின் உடல்மொழி, நடிப்பு, தோற்றம் என எல்லாவற்றிலும் ஒரு மாற்றம் இருக்கும் என இயக்குநர் சர்ஜுன் கூறினார்.
இந்த கதாபாத்திரத்தின் தோற்றத்துக்காக முகத்தில் கருப்பு நிற மேக் அப் போட்டுள்ளார் நயன்தாரா. யமுனா என்ற இன்னொரு கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளனர். இரட்டை வேடம் என்றாலும் இரண்டும் வெவ்வேறு கதாபாத்திரங்கள், இரட்டையர் அல்ல, என்றனர் படக்குழுவினர். ஹாரர் வகைமையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பெண் சிசுக் கொலைதான் மையக் கதை என்றனர் படக்குழுவினர்.

படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த டீஸரைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாராவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


