கன்னட நடிகரான யஷ், கேஜிஎஃப் க்கு முன்பு மிஸ்டர் & மிஸஸ் ராமாச்சாரி, கஜகேசரி, மொக்கின மனசு உள்ளிட்ட 19 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவற்றில் ஒன்றிரண்டு திரைப்படங்களில் கேமியோ கதாபாத்திரங்களாக அமைந்திருந்தாலும் மொக்கின மனசுக்குப் பிறகு யஷ் கவனிக்கத்தக்க இளம் ஹீரோக்களில் ஒருவராகி விட்டார் என்கிறது சாண்டல்வுட் வட்டாரம். இதில் மேலும் சுவாரஸ்யம் என்னவெனில் யஷ், மிஸ்டர் & மிஸஸ் ராமாச்சாரி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கையில் உடன் நடித்த நாயகி ராதிகா பண்டிட் என்பவருடன் காதலில் இருக்கிறார் என்று சில ஆண்டுகள் கிசுகிசு எழுதப்பட்டு வந்தது. இருவரும் அதை மறுத்தார்களோ இல்லையோ நான்காண்டுகளுக்குள் திருமணமே செய்து கொண்டார்கள். இப்போது இந்த நட்சத்திரத் தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உண்டு.