இந்த வருட பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் படங்களும் தீபாவளிக்கு பிகில், கைதி படங்களும் வெளியாகின. இந்த நான்குமே வெற்றி பெற்று அசத்தின.
இந்நிலையில் வருகிற பொங்கலுக்கு 3 தமிழ்ப் படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினி நடித்த தர்பார், தனுஷ் நடித்த பட்டாஸ் மற்றும் சிவா நடித்த சுமோ.
சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினி நடித்துள்ள 167-வது படம். ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. சுனில் ஷெட்டி, பிரதீக் பப்பர் போன்றோரும் நடித்துள்ளார்கள். ஜனவரி 9 அன்று தர்பார் வெளியாகவுள்ளது. இதனால் இந்தப் படம் பொங்கல் விடுமுறை தினங்களால் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் - பட்டாஸ். தனுஷ், சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன், நாசர், சதீஷ் போன்றோர் நடித்துள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசை விவேக் - மெர்வின். பட்டாஸ், ஜனவரி 16 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப்படம் 2 படத்துக்கு அடுத்ததாக சுமோ என்கிற படத்தில் நடித்துள்ளார் சிவா. சிவா கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாசிரியராகவும் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியுள்ளார். ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோவும் பங்குபெற்றுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளருமான இயக்குநருமான ராஜீவ் மேனன், ஒளிப்பதிவு செய்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கத்திய நடனத்தில் சாதனை: 7 மாணவிகளுக்கு விருது

மின்சாரம் பாய்ந்து கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

காவலா் விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


