பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: பிரபல பாலிவுட் நடிகைக்குப் பிரச்னையா?  

'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ' ('Beti Bachao, Beti Padhao') என்ற அமைப்பின் அதிகாரபூர்வமான தூதராக ஹிந்தி நடிகை பரினீதி சோப்ரா இருந்து வந்தார்.

News image
Updated On :21 டிசம்பர் 2019, 4:55 am

'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ' ('Beti Bachao, Beti Padhao') என்ற அமைப்பின் அதிகாரபூர்வமான தூதராக ஹிந்தி நடிகை பரினிதி சோப்ரா இருந்து வந்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து தனது சுட்டுரையில் கருத்து தெரிவித்ததால், அந்த அமைப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. ஆனால் இது தவறான மற்றும் ஆதாரமற்ற செய்தி என ஹரியானா அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளனர். பரினிதியின் ஒப்பந்தம் ஒரு வருடத்துக்கானது மட்டுமே. அதாவது ஏப்ரல் 2017 வரையில்தான். அதன்பிறகு அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

பரினிதி சோப்ரா சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் 'தி கேர்ள் ஆன் தி ட்ரெயின்' என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இந்தப் படத்தில் அதிதி ராவ் ஹிதாரி, கீர்த்தி குல்ஹாரி மற்றும் அவினாஷ் திவாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது தவிர, சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றிலும் நடித்து வருகிறார். இந்தப் படத்திலிருந்து ஷ்ரத்தா கபூர் விலகிய பின்னர் பரினிதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். பரீனிதி சோப்ரா பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.