ஜான்வி சொல்வதில் நியாயம் இல்லாமலில்லை. சினிமா நடிகைகள் என்றால் அவர்கள் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்தே ஆக வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. ஆனால், இந்த மும்பை புகைப்படக்காரர்கள் இருக்கிறார்களே! அவர்களுக்கு எந்த நடிகையைப் பொதுவெளியில் கண்டாலும் சரி உடனே புகைப்படமெடுத்தே ஆக வேண்டும், இல்லா விட்டால் தலை வெடித்து விடும். அவர்கள் ஹீரோ, ஹீரோயின்களை மட்டுமல்ல, அவர்களது குழந்தைகளையும், தாதிகளையும், வீட்டு வேலைக்காரர்களையும் கூட விட்டு வைப்பதில்லை. அவர்களைக் குடைந்தால் ஏதேனும் சர்ச்சையான செய்தி கிடைத்து விடாதா! என்ற நப்பாசையில் சதா பின் தொடர்வார்கள்.