சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

என் ஃபேவரிட் ஆக்டரைப் பார்த்ததும் உடனே ஓடிப்போய் செல்ஃபீ எடுத்துக்கிட்டேன் பாஸ்!: அமீர்கான்

தூரத்தில் சிரஞ்சீவியைக் கண்டதுமே அமீருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. உடனே ஓடிச்சென்று அவரைச் சந்தித்துப் பேசியதோடு குதூகலமாக ஒரு செல்ஃபீயும் எடுத்து அதைத் தனது ட்விட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:36 am

சரோஜினி

சமீபத்தில் நடிகர் அமீர்கான் ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து ‘என் ஃபேவரிட் ஆக்டரைப் பார்த்ததும், உடனே ஓடிப்போய் அவரோட செல்ஃபீ எடுத்துக்கிட்டேன்’ என்று சாமான்ய ரசிகரைப் போல குதூகலித்திருந்தார். அமீர்கான் பெரிய இண்டர்நேஷனல் ஸ்டார், அவரே செல்ஃபீ எடுத்துக் கொள்ள விரும்பும் ஆக்டர் என்றால் அவர் மிகப்பெரிய ஹாலிவுட் ஸ்டாராக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் நினைத்திருக்கக் கூடும். அது தான் இல்லை. அமீர் ஓடிப்போய் செல்ஃபீ எடுத்துக் கொண்டது டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன்.

இருவரும் அவரவர் திரைப்படங்களின் படப்பிடிப்புக்காக ஜப்பான் சென்றிருந்த சென்றிருந்த வேளையில் திடீரென கியோட்டா விமானநிலையத்தில் அமீரின் பார்வையில் சிரஞ்சீவி பட்டிருக்கிறார். தூரத்தில் சிரஞ்சீவியைக் கண்டதுமே அமீருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. உடனே ஓடிச்சென்று அவரைச் சந்தித்துப் பேசியதோடு குதூகலமாக ஒரு செல்ஃபீயும் எடுத்து அதைத் தனது ட்விட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

Story image

இந்தச் சந்திப்பில் இருவரும் தங்களது வரவிருக்கும் திரைப்படங்கள் குறித்த செய்திகளையும் பகிர்ந்து கொண்டதாகத் தகவல். சிரஞ்சீவி தற்போது சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கைப் படத்தில் நரசிம்ம ரெட்டியாக நடித்து வருகிறார். சை ரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், விஜய்சேதுபதி, நயன் தாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.