பிக்பாஸில் வென்றால் டைட்டில் வின்னர் என்ற பட்டம் கிடைக்கும். 50 லட்ச ரூபாய் பரிசு கிடைக்கும். ஆனால், அந்த 50 லட்ச ரூபாய் எல்லாம் தனக்குத் தேவையே இல்லை. 50 லட்சம் ரசிகர்களின் அன்பு தான் தனக்கு அதை விடப் பெரிதாகத் தோன்றுகிறது என்றும் டேனியல் தெரிவித்தார். பிக்பாஸுக்கு முன்பு தான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தும், பிக்பாஸ் மூலமாகத்தான் தான் ரசிகர்களிடம் பிரபலமாக வேண்டியதாக இருக்கிறது. அது தன்னுடைய நேரம்! வேறென்ன செய்வது என்று மெலிதாகச் சலித்துக் கொண்ட டேனி, தன்னைப் பற்றி பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவர்கள் ஃபேக் என்று சொன்னாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு வேளாங்கன்னியில் தன்னைச் சந்தித்த ரசிகர்களும், நண்பர்களும், ‘டேனி உன்னைப் பார்க்க ஆக்டர் மாதிரி இல்லடா ஆக்சுவலா இருக்கற மாதிரி தான் இருக்கு’ என்று சொல்வதைக் கேட்கும் போது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.