15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

யார் இந்த மெளஜி மற்றும் மம்தா?

வருண், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் உருவாகி வரும் படம் "சுய் தாகா - மேட் இன் இந்தியா'. சரத் கட்டாரியா

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 6:45 am

வருண், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சுய் தாகா - மேட் இன் இந்தியா'. சரத் கட்டாரியா இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக விளங்குகிறது. 

Story image

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் மெளஜி மற்றும் மம்தா எனும் கதாபாத்திர பெயர்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள  கைவினைக் கலைஞர்களை படக்குழு சந்தித்து வருகிறது. தில்லி, சென்னை, மும்பையில் உள்ள பெருநகரங்களுக்கு அருகில் உள்ள கைவினைக்  கலைஞர்களை இந்தப் படக்குழு சந்திக்க உள்ளது. 

Story image

'இந்தப் படம் இளைஞர்கள் தன் திறமைகளை வைத்து யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற கருத்தினை கொண்டது. எனவே இந்த விளம்பர பயணம் நம் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு நல்ல ஊக்குவிப்பாக இருக்கும்' என தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். 'நம் நாட்டிலுள்ள இளம் கைவினை கலைஞர்களை சந்திக்க வேண்டி ஆசைப்படுகிறேன். அவர்களின் திறமைகளும், வித்யாசமான தொழில் நுட்பத்தையும் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்' என நடிகர் வருண் தவான் கூறியுள்ளார். செப்டம்பர் 28-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.