லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். அண்மையில் தனது 34-வது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்த நயன்தாரா, பெண் மையக் கநாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

நயன்தாராவின் பிறந்த நாளன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் அவர் நடித்த ஆல்பம் ஒன்றின் புரோமோவை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். ‘ஜெய்ஹிந்த் இந்தியா...’ எனும் அந்த விடியோ இணையத்தில் வெளியானதிலிருந்து பரபரப்பாக கவனம் பெற்று வைரலாகி வருகிறது. இந்த விடியோவில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த ஆல்பத்தில் ரஹ்மானுடன் இணைந்து ஸ்வேதா மோகன், டிரம்ஸ் சிவமணி, நீதி மோகன், சாக்ஷா த்ரிபாதி உள்ளிட்டோரும் பங்காற்றியுள்ளனர்
கவிஞர் குல்சார் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த புரோமோ வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் தனது யூடியூப் பக்கத்தில் இவெளியிட்டுள்ளார். இரண்டே நாட்களில் ஆறு லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது இந்த விடியோ. இந்திய ஹாக்கி அணியை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிற விதமாகவும் இந்த விடியோ உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


