மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச் சிலை திறப்பு அண்மையில் நடைபெற்றது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை உள்ளிட்ட துறைகளில் வெற்றி பெற்று வரும் உலகளவில் பிரபலமானவர்களுக்கு மெழுகினால் ஆன ஆளுயர சிலை நிறுவப்படுகின்றன.
லண்டன், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகங்களில் மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகங்களின் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த விஐபிகளின் சிலை அருகே நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள்.

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டோருக்கு சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஆளுயர மெழுகுச் சிலை திறக்கப்பட்டுள்ளது. அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச் சிலையில் கையில் ஒரு விலையுயர்ந்த மொபைல் ஃபோன் ஒன்று இயங்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனுஷ்காவின் கையில் உள்ள மொபைல் போனின் மூலமாகவே ‘செல்பி’ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நவீன வசதியுடன் இந்தச் சிலை அமைந்துள்ளது. மேலும் அனுஷ்காவின் குரல் பதிவு செய்யப்பட்டு அது காண்போரை வரவேற்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுமையான இத்தகைய வசதிகள் முதன்முறையாக மெழுகுச் சிலைகளை அமைக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


