தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாவ் சொல்ல வைக்கும் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாஸிபிள் ஃபால் அவுட் ட்ரெய்லர்! (விடியோ)

News image
Updated On :18 மே 2018, 9:53 am

ஹாலிவுட் நட்சத்திரமான டாம் க்ரூஸ் நடிப்பில் வெளிவந்த 'மிஷன் இம்பாஸிபிள்' வரிசைப் படங்கள், உலகத் திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும், வணிக ரீதியிலும் மிகப் பெரிய வெற்றிப் படங்களாகவும் அமைந்தவை.

அதன் புதிய பாகமாக 'மிஷன் இம்பாஸிபிள் ஃபால் அவுட்’ என்ற படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. அதிரடி ஆக்‌ஷன் ஜானரில் உருவான இந்த ஸ்பை திரில்லர் படத்தில் வெற்றி நாயகன் டாம் க்ரூஸ் ஹீரோவாக நடித்துள்ளார். 

Story image

இந்தப் படத்தின் முதல் டிரெய்லர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ரசிகர்களின் பலத்த ஆதரவைப் பெற்ற நிலையில், மே 15-ம் தேதி இரண்டாவது டிரெய்லரை வெளியிட்டனர் படக்குழுவினர். வெளியான மூன்று நாட்களில் இதுவரை 10 ஆயிரம் கருத்துரைகளையும், பத்து மில்லியன் பார்வையாளர்களையும் மிஷன் இம்பாஸிபிள் ஃபால் அவுட் ட்ரெய்லர் பெற்றுள்ளது. அவ்வகையில் படத்துக்கான எதிர்ப்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துவிட்டது.

Story image

பரபரப்புக்கு சற்று பஞ்சம் இருக்காத சேஸிங் காட்சிகள் உட்பட, பதற்றப்படுத்தும் ஹெலிகாப்டர் சேஸிங்கில் அசத்துகிறார் டாம் க்ரூஸ். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு காலில் பலத்த அடி பட்டது. சிகிச்சைக்கும் ஓய்வுக்கும் பின்னர் படப்பிடிப்பில் மீண்டும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு விரைவாக ஷூட்டிங் தொடர ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் டாம் க்ரூஸ்.

Story image

இந்தப்படம் வரும் ஜுலை 27-ம் தேதி அமெரிக்காவில் வெளியாகவிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.