மலையாளத் திரையுலகில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் கலாசால பாபு. இவர் ஒரு நடிகரும் கூட. வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கலாசால பாபுவின் தந்தை கலா மண்டலம் கிருஷ்ணன் நாயர் பிரபல கதகளி கலைஞர் ஆவார். இவரது தாய் கல்யாணிக் குட்டி அம்மாவும் மோஹினி ஆட்டக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
1977-ம் ஆண்டு வெளியான இணையே தேடி என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நாடகக் கலைஞர் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். ரன் அவே, பாலேட்டன், கஸ்தூரி மான், துருக்கு குலான், லயன் ஆகியவை அவருக்கு பெயர் வாங்கி தந்த படங்கள். கடைசியாக அவர் நடித்த படம் குயின்.
அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கலாசால பாபு. ஞாயிற்றுக் கிழமை (மே 13) இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட செரிபெரல் ஹெமரேஜ் (cerebral hemorrhage) ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு 68 வயது.
கலாசால பாபுவிற்கு மனைவி லலிதா, மகள் ஸ்ரீதேவி மற்றும் மகன் விஸ்வநாதன் ஆகியோர் உள்ளனர். அவரது பிரிவால் துயரத்திலிருக்கும் அவர் குடும்பத்திற்கு, திரையுலகை சார்ந்த அவரது நண்பர்கள் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது இழப்பு மலையாள திரையுலகினரை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவு

சட்டப்பேரவைத் தோ்தல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

நெல்லை மாவட்டத்தில் 77.37 % வாக்குகள் பதிவு: 3,322 பேருக்கு டோக்கன் விநியோகம்

நெல்லை வேட்பாளா்கள் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


