ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காலாவுடன் மோதவுள்ள ஜூராசிக் வேர்ல்ட்!

ஜூன் 8 அன்று இந்தியாவில் 2300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது...

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:03 pm

எழில்

கிறிஸ் பிராட், பிரைஸ் டால்ஸ் ஹோவர்ட், வோங் நடிப்பில் ஜே.ஏ. பயோனா இயக்கியுள்ள படம் - ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் (Jurassic World: Fallen Kingdom).

2015-ல் வெளிவந்த ஜூராசிக் வேர்ல்ட் படத்தின் அடுத்தப் பாகம் இது. ஜூராசிக் வகைப் படங்களில் வெளிவரும் 5-ம் பாகம் இது.

1993-ல் வெளிவந்த ஜூராசிக் பார்க் படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கினார். அவர் இப்படத்தின் எக்ஸிகியூடிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் அமெரிக்காவில் வெளிவருவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே இந்தியாவில் வெளியாகவுள்ளது. ஜூன் 8 அன்று இந்தியாவில் 2300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன் 7 அன்று வெளிவருகிற நிலையில் அடுத்த நாள் வெளியாகும் ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம், ரஜினி படத்துடன் போட்டியிடவுள்ளது. எனினும் திரையரங்குகளில் இரு படங்களுக்கும் நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube video thumbnail
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.