தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நடிகர் சிவகார்த்திகேயன் கவிஞர் சிவ கார்த்திகேயன் ஆகிறார்!

தற்போது கோலிவுட்டை கலக்கும் செய்தி இதுதான். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள

News image
Updated On :12 மே 2018, 9:45 am

தற்போது கோலிவுட்டை கலக்கும் செய்தி இதுதான். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள `கோலமாவு கோகிலா' படத்தில் கல்யாண வயசு எனத் தொடங்கும் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான இது, பாடல் மே 17- ம் தேதி வெளியாக உள்ளது.

`கோலமாவு கோகிலா' படத்தில் ஜாக்குலின் நயன்தாராவுக்குத் தங்கையாக நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப்படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. முதல் பாடலான ‘எதுவரையோ...’ என்ற விடியோ, கடந்த மார்ச் 8-ம் தேதி வெளியானது. விவேக் மற்றும் கெளதம் மேனன் இணைந்து இப்பாடலை எழுதினார்கள். பாடியவர் ஷான் ரோல்டன், இடையிடையே வரும் வசனங்களை கெளதம் மேனன் பேசியிருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது பாடலை எழுத சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பளித்துள்ளார் அனிருத். இருவரும் அமர்ந்து பாடல் வரிகளை பற்றி கலந்தாலோசிப்பது போன்ற ஒரு விடியோவை அனிருத் தன் முகநூலில் அண்மையில் வெளியிட்டார்.

Story image

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்தியேனின் அடுத்த படத்தில் நயன்தாராவுடன் இரண்டாம் முறையாக இணைகிறார். தற்போது நயன்தாராவுக்காக ஒரு பாடலை எழுதியிருப்பது மகிழ்ச்சி என கூறியிருக்கிறார் சிவா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.