அரவிந்த் சாமி, அமலா பால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா உள்ளிட்டோர் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இன்று (மே 11) வெளியாகவிருந்த இத்திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கான காரணமும் சொல்லப்படவில்லை. இரவு 11 மணியளவில் மேல் பாஸ்கர் ஒரு ராஸ்கல் நாளை வெளியாகாது என அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர், 'பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. படத்தின் டிக்கெட்டுகளை பொதுமக்கள் அட்வான்ஸ் புக்கிங் செய்த பிறகும் மீண்டும் வெளியீடு தள்ளிப் போனதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. படம் வெளியாகும் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு இது ஏமாற்றத்தையே தரும். எனக்கும் வருத்தமாகவும் ஏமாற்றமாகவும்தான் உள்ளது.

இந்தப் படத்தின் போது ஷூட்டிங் மற்றும் புரோமஷன் உள்ளிட்ட இதர விஷயங்களுக்கு நான் படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பக்கபலமாக இருந்திருக்கிறேன். இனி ஒருபோதும் ரிலீஸ் தேதியை நான் அறிவிக்கமாட்டேன். அனைவரும் குடும்பத்துடன் சந்தோஷமாக பார்க்கும் வகையில் இந்தப் படம் இருக்குமென்று உறுதியாகச் சொல்வேன். இன்று வெளியாகும் மற்ற படங்கள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டிருந்தார் அரவிந்த சாமி.
இதற்கு முன்னால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் ஐந்து முறை தள்ளிப் போயிருக்கிறது. கடந்த ஜனவரி 12-ம் தேதியும், மார்ச் 29-ம் தேதியும், ஏப்ரல் 27-ம் தேதியும், மே 11-ம் தேதியான இன்றும் வெளியாவதிலிருந்து தள்ளிப்போனது. இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
படம் மே 18 வெளியாகலாம் எனவும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறுகின்றனர் படக்குழுவினர்.
mdasharvind swamithearvindswami) May 10, 2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவு

சட்டப்பேரவைத் தோ்தல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

நெல்லை மாவட்டத்தில் 77.37 % வாக்குகள் பதிவு: 3,322 பேருக்கு டோக்கன் விநியோகம்

நெல்லை வேட்பாளா்கள் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


