ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

விரைவில் காதலரைக் மணக்கவிருக்கிறார் நடிகை தீபிகா படுகோன்!

தற்போது 32 வயதாகும் தீபிகா படுகோன் நீண்ட காலமாக ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார்.

News image
Updated On :26 மார்ச் 2018, 12:24 pm

தற்போது 32 வயதாகும் தீபிகா படுகோன் நீண்ட காலமாக ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக பாலிவுட்டில் செய்தியொன்று வெளியாகியுள்ளது.

Story image

தீபிகாவின் அம்மா உஜாலா படுகோன் மற்றும் சகோதரி அனிஷா படுகோன் ஆகியோர் திருமணத்திற்கு தேவையான பொருட்களையும், தீபிகாவிற்கான நகைகளையும் பெங்களூருவில் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வெளியானது. தனது திருமணத்தை தென்னிந்திய முறைப்படி நடத்த ஆசைப்படுகிறாராம் தீபிகா. விரைவில் இந்த திருமண அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

தீபிகாவின் திருமண செய்தியைப் பற்றி அறிந்த நெட்டிசன்கள் தீபிகா - ரன்வீரை வைத்து போட்டோஷாப் செய்து ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட, அது உடனடியாக வைரலானது.

Story image

விஷால் பரத்வாஜ் இயக்கவிருக்கும் சப்னா தீதி படத்தில் அடுத்து நடிக்கவிருக்கிறார் தீபிகா. இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான இர்ஃபான் கான் உடல் நலிவுற்று, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் தற்போது சிம்பா எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார். தீபிகா, ரன்வீர் ஜோடி தற்போது லண்டனில் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜோடியைப் பொருத்தவரையில் மீடியாவில் பேசுவதையும், திருமணம் குறித்து செய்திகளை வெளியிடுவதிலும் தயக்கம் காட்ட மாட்டார்கள் என நம்புகிறது பாலிவுட். விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா போல ரகசியத் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்றும் நம்புகிறது பாலிவுட் மீடியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.