கோலிவுட்டின் சூப்பர் ஜோடி என்று புகழப்படுபவர்கள் இயக்குநர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிதான். சமூக வலைத்தளங்களில் இந்த இணையரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அண்மையில் நடந்த விழாவொன்றில் பொதுமேடையில் காதலருக்கு நயன்தாரா நன்றி தெரிவித்தார்.

பிரபல ஆங்கில நாளிதழ் நடத்திய வேர்ல்டு ஆஃப் வுமன் 2018 (World Of Women 2018) என்ற விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நீண்ட காலம் ரசிகர்களை தக்க வைத்து திரையுலகில் வெற்றி வலம் வருகிறார் நயன்தாரா. அவரது இந்த சாதனையை பாராட்டும் விதமாக Excellence in entertainment எனும் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, இந்த விருது மற்ற விருதுகளைப் போலில்லை. இது எனக்கு வித்யாசமான விருதாகும். இந்த விருதை வாங்கும் மற்றவர்கள் என்னை பெரிதும் ஊக்குவிக்கிறார்கள். என்னுடைய வளர்ச்சியின் காரணமான எனது அம்மா, சகோதரருக்கு நன்றி. மற்றும் வருங்கால கணவருக்கும் நன்றி’ என முத்தாய்ப்பாகக் கூறியுள்ளார் நயன்தாரா. மேடையில் முதன்முறையாக தனது காதலை ஒப்புக்கொள்ளும் விதமாக வருங்கால கணவரான விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கு நயன்தாரா அணிந்து வந்த புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது நயனின் இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


