/

ஏன் பாஸ்? இந்த லிஸ்டில் ஒரு தமிழ் ஹீரோ கூடவா தேறவில்லை!

இந்தப் பட்டியலில் நீங்கள் விரும்பும் ரீல் ஜோடிகள் இதிலிருக்கிறார்களா என்று பாருங்கள்?!

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:29 pm

சரோஜினி

சமீபத்தில் சோனம் கபூர், துல்கர் சல்மான் இணைந்து நடிக்க இந்தியில் ‘தி ஜோயா ஃபேக்டர்’ என்றொரு திரைப்படம் தயாராகிக் கொண்டிருப்பதாக செய்தி.

சோனம் சில வருடங்களுக்கு முன்பு தனுசுடன் ‘ராஞ்சனா’ என்றொரு இந்தித் திரைப்படத்தில் நடித்து படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தது. அதே வரிசையில் மீண்டுமொரு தென்னிந்திய நடிகரோடு சோனம் ‘தி ஜோயா ஃபேக்டர்’ திரைப்படத்தில் இணைகிறார். வட இந்திய நடிகைகள் பெரும்பாலும் தென்னிந்திய ஹீரோக்களோடு இணைந்து நடிக்க அக்கறை காட்டியதில்லை. அதில் விதிவிலக்கானவர் சோனம்.

இவரையடுத்து மற்ற பிரபல இந்தி நடிகைகளும் தென்னிந்திய ஹீரோக்களோடு ஜோடியிட்டால் எந்தெந்த ஜோடி ரசிகர்களின் விரும்பத்தக்க ஜோடியாக இருக்கும் என்று சமூக வலைத்தளமொன்றில் பட்டியலிட்டிருந்தார்கள். அந்தப் பட்டியலில் உங்களுக்குப் பிடித்த ஜோடிகள் இருக்கிறார்களா? என்று பாருங்கள்.

ப்ரியங்கா சோப்ரா & ராணா

Story image


தீபிகா படுகோன் & ப்ரித்விராஜ்

Story image


கங்கனா ரணாவத் & நிவின் பாலி

Story image


வருண் தேஜ் & ஆலியா பட்

Story image


அனுஷ்கா ஷர்மா & ஜூனியர் என் டி ஆர்

Story image

ஆனால் பாருங்கள் இந்த லிஸ்டில் மருந்துக்கும் தமிழ் மற்றும் கன்னட ஹீரோக்களைக் காணோம். ஏன் பாஸ்? ஒரு தமிழ் & கன்னட ஹீரோ கூடவா தேறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.