பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மன அழுத்தப் பிரச்னையால் தூக்குப் போட்டு டிவி நடிகை தற்கொலை!

கொல்கத்தாவில் 23 வயது இளம் டிவி நடிகை, தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை விளைவித்துள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2018, 11:01 am

கொல்கத்தாவில் 23 வயது இளம் டிவி நடிகை, நேற்று (மார்ச் 10, 2018) தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை விளைவித்துள்ளது. மெளமிதா சாஹா என்ற அந்த நடிகை, பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக தெற்கு கொல்கத்தாவின் ரீஜென்ட் பார்க்கிலுள்ள ஒரு அபார்ட்மெண்டில் வீடெடுத்து தனியாக வசித்து வந்தார். 

சில டிவி சீரியல்களில் நடித்திருந்தாலும், தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இரவு வெகு நேரமாக மெளமிதாவை அவரது பெற்றோர்கள் மொபைலில் அழைத்துள்ளனர். ஆனால் அழைப்பு எடுக்கப்படாமல் இருக்கவே, அவர்கள்  சந்தேகம் அடைந்து  உடனே வீட்டின் உரிமையாளருக்கு தகவலைத் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை முழுவதும் அந்த வீட்டி கதவு திறக்கப் படமால் இருக்கவே அவருக்கும் சந்தேகம் ஏற்பட்டு கதவை பல முறை தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் அவரால் திறக்கவும் முடியவில்லை. சந்தேகம் வலுப்பெற்று அவர் உடனடியாக போலீலில் புகார் அளித்தார்.

அங்கு வந்த போலீசார்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மெளமிதா சாஹா ஃபேனில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். அவரது அறையில் இருந்த தற்கொலைக் கடிதத்தைப் போலீசார் கைப்பற்றினர். நடிகையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலைக் குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.