நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எவடா எவடா உன்னை பெத்தா பெத்தா? ஆண்களையும் கலாய்க்கும் தமிழ்படம் 2.0 படத்தின் கலக்கல் பாடல் (விடியோ)

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப் படம்’.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:26 pm

ராக்கி

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப் படம்’. தமிழ்ப் படங்களை கன்னா பின்னாவெனக் கலாய்த்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் இரண்டாம் பாகமான ‘தமிழ்ப் படம் 2.0’ உருவாகி வருகிறது. சி.எஸ்.அமுதன் இயக்கி வரும் இதிலும் மிர்ச்சி சிவாதான் கதாநாயகன். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார்.

திஷா பாண்டே (தமிழ்படத்தின் நாயகி) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கண்ணன் இசையமைத்து வரும் இப்படட்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளர். ‘Y NOT ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் தயாரிக்கும் இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் வெளியிடவுள்ளது.  இப்படத்தை சம்மர் ரிலீஸாக மே 25-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

YouTube video thumbnail

அண்மையில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகர் மாதவன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘எவடா உன்ன பெத்தா’ எனும் பாடலை வெளியிட்டுள்ளார். வெளியானதிலிருந்து இப்பாடல் அதிக பார்வையாளர்களைப் பெற்று வைரலாகி வருகிறது. காரணம் அதன் ஒவ்வொரு வரிகளும் நடிகர்கள் சிம்புவின் பீப் சாங் மற்றும் தனுஷுன் கொலைவெறி பாடல்களைக் கலாய்க்கும் விதமாக உள்ளது.  
 
எவடா எவடா உன்னைப் பெத்தா பெத்தா
கையில கிடைச்சா அவ செத்தா செத்தா
அட்றா அவனை உதைடா அவனை
வெட்றா அவனை....தேவையே இல்லை!

கை செலவுக்கு நாங்க வேணும்
கிஸ் அடிச்சிட நாங்க வேணும்
கேர்ள் ப்ரெண்ட் இருக்குன்னு 
கெத்தா சுத்த உங்களுக்கு நாங்க வேணும்

என்ன சண்டேக்கு லவ் பண்றே என்ன மண்டேக்கு லவ் பண்றே
என்ன ட்யூஸ்டேக்கு லவ் பண்றே என்ன ஃப்ரைடேக்கு லவ் பண்றே

நான் உன்கூட இருக்கும் போதே என் ப்ரெண்ட்டை ரூட் உட்றே நாயே
கற்பு கல்ச்சர்னு என்கிட்டேயே ஏன் நீ லெக்சர் அடிக்கறியே
சனியனே

அடக்கி ஆள நினைக்கும் டாங்கி நீங்க
உன் சொல்லைக் கேட்டு ஆட மங்கியா நாங்க
புல்ஷிட்
அட்றா அவனை உதைடா அவனை
வெட்றா அவனை தேவையே இல்லை...

தம்மு தண்ணி அடிச்சு நீ நாசமாத்தான் போவே
உன்னை நானும் திருத்தி திருத்தி என் லைஃபை தொலைக்கணுமா
என்ன கொண்டைக்கு லவ் பண்றே என்ன மண்டைக்கு லவ் பண்றே
என்ன சண்டைக்கு  லவ் பண்றே என்ன தொண்டைக்கு லவ் பண்றே
லவ் பெய்லர்னு சொல்லி ஆசிட் அடிக்கற நீங்க
எனகிட்ட ஏன் டா கொலைவெறி பத்தி மானங்கெட்டு பேசறீங்க
நீ என்னை விட்டு போனா 
லாஸ் எனக்கில்லை
உன் மொக்கை மூஞ்சிக்கெல்லாம்
ஊரில் பொண்ணே இல்லை
போடாங்
அட்றா அவனை உதைடா அவனை
வெட்றா அவனை தேவையே இல்லை...
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.