பிரபல நடிகருக்கு நெஞ்சு வலி! விமானப் பயணத்தின் போது விபரீதம்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் கேப்டன் ராஜு.


தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் கேப்டன் ராஜு. இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாவார். கொச்சியிலிருந்து திங்கள் கிழமை அமெரிக்காவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் பயணித்த விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தர்மத்தின் தலைவன், சின்னப்பதாஸ் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார் கேப்டன் ராஜ். அனைத்து மொழிகளிலும் இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் கேப்டன் ராஜு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...