நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தீபிகா படுகோனுக்கு விரைவில் டும் டும் டும்! காதலரை கரம் பிடிக்கிறார்!

பாலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் தீபிகா படுகோனுக்கு ரசிகர்கள் உள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:58 pm

ராக்கி

பாலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் தீபிகா படுகோனுக்கு ரசிகர்கள் உள்ளனர். கோச்சடையான், பத்மாவத், சென்னை எக்ஸ்ப்ரஸ் போன்ற படங்கள் அவருக்கு 

தீபிகா படுகோனேவும் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங்கும் இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். அண்மையில் வெளியான பத்மாவத் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ரன்வீர். இருவரும் ஜோடியாக சமூக வலைத்தளங்களில் தங்கள் படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். 

இந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபிகா படுகோன் ரன்வீர்சிங் திருமணம் நடக்க உள்ளதாக மும்பய் ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த திருமணம் இத்தாலியில் நடக்க இருப்பதாக இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். ரன்வீர் சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா துறை தூதுவராக இருக்கிறார். அதனால் அந்த அரசாங்கம் தங்கள் நாட்டில் வந்து திருமணம் செய்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளதாம்.

அனுஷ்கா விராட் கோலியைத் தொடர்ந்து தீபிகா படுகோனும் திருமணம் செய்து கொள்ள இத்தாலியை தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. திருமணத்தை முடிந்த கையோடு விமர்சையாக மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு மும்பையில் மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு தளங்கள் உள்ள வீட்டை விலைக்கு வாங்கியுள்ளனர். அவ்வீட்டில் தற்போது ரன்வீர் சிங் தமது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.  விரைவில் அவர்களது திருமணம் குறித்த அதிகாரபூர்வமான செய்தி வெளிவரும் என்கிறார்கள் தீபிகா தரப்பினர்.

பாலிவுட்டில் இது திருமண சீஸன் போலும். விராட் கோலி அனுஷ்கா ஷர்மா, சோனம் கபூர் ஆனந்த் அஹுஜா இவர்களைத் தொடர்ந்து தீபிகா படுகோன் ரன்வீர் சிங் மற்றும் ரன்பீர் கபூர் அலியா பட் ஜோடியின் திருமணமும் விரைவில் நடக்கவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.