நடிகர் தனுஷ் படத்தில் மூன்று ஹீரோயின்களா? மாரி 2 படத்தில் இணைந்துள்ள புதிய நாயகி யார்?
2014-ம் ஆண்டு வெளிவந்த மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் அதன் இரண்டாம் பாகமாக மாரி 2 எடுத்துவருகிறார்.


2014-ம் ஆண்டு வெளிவந்த மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் அதன் இரண்டாம் பாகமாக மாரி 2 எடுத்துவருகிறார். இதிலும் தனுஷ் தாதாவாக நடிக்கிறார். தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மலையாள நடிகர் டொவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், க்ருஷ்ணா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இந்த வருட இறுதிக்குள் மாரி 2 திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் மூன்றாவது நடிகையாக வித்யா பிரதீப் இணைந்துள்ளார். பசங்க 2, சைவம் உள்ளிட்ட படங்களில் வித்யா நடித்துள்ளார். அண்மையில் வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருந்தார். தற்போது 'மாரி 2'-வில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இச்செய்தியை படங்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வித்யா பிரதீப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...