நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஹாலிவுட் திரைப்பட நடிகை யூனிஸ் கேசன் காலமானார்!

ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வரிசையின் முதல் படமான ‘டாக்டர் நோ’ படத்தின் கதாநாயகி யூனிஸ் கேசன் (Eunice Gayson) (90) காலமானார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:56 pm

ராக்கி

ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வரிசையின் முதல் படமான ‘டாக்டர் நோ’ படத்தின் கதாநாயகி யூனிஸ் கேசன் (Eunice Gayson) (90) காலமானார். 

‘டாக்டர் நோ’ 1962-ம் ஆண்டு வெளியான படம். இப்படத்தில் பிரபல துப்பறியும் வீரர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் சீன் கேனரி நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக உருசலா ஆண்ட்ரஸ் மற்றும் யூனிஸ் கேசன் ஆகியோர் நடித்திருந்தனர். ஃபிரம் ரஷ்யா வித் லவ் படத்திலும் சீன் கேனரியுடன் நடித்த அவர், சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த யூனிஸ் கேசன், கடந்த 8-ஆம் தேதி லண்டனில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகம் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.