/

காலா வெளியான நாளில் ரஜினியின் புதுப்படம் தொடக்கம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது... 

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:14 pm

எழில்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அரசியல் பரபரப்புகளுக்கிடையே இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். ரஜினியின் உறவினரான அனிருத், முதல்முறையாக ரஜினி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

இதுவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயண் தான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம் மூலமாக முதல்முறையாக கார்த்திக் சுப்புராஜும் அனிருத்தும் இணைகிறார்கள்.

காலா படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம் தொடங்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.