டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சிறந்த நடிகருக்கான இரு சர்வதேச விருதுகளுக்கு ‘மெர்சல்’ விஜய் பரிந்துரை! ரசிகர்கள் வாக்களிக்க விருப்பமா?

இந்தப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் வென்ற நடிகர்கள்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:17 pm

எழில்

ஐஏஆர்ஏ என்கிற சர்வதேச விருதுப் பரிந்துரைப் பட்டியலில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. இதனால் பெரும் சர்ச்சை உருவானது. எனினும், மெர்சல் படத்தின் வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் INTERNATIONAL ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018-ம் ஆண்டுக்கான ஐஏஆர்ஏ  விருதுப் பரிந்துரைப் பட்டியல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2014 முதல் வழங்கப்பட்டு வரும் இந்தச் சர்வதேச விருதுப் பரிந்துரைப் பட்டியல்களில், இரு பிரிவுகளில் விஜய் இடம்பெற்றுள்ளார். சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் என இரு பரிந்துரைப் பட்டியல்களில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றுள்ளார். 

இந்தப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் வென்ற நடிகர்கள் விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். இதையடுத்து விஜய் ரசிகர்கள் இந்தப் பக்கத்துக்குச் சென்று விஜய்க்கு வாக்களிக்கலாம்.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.