நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நித்யா மேனனா இப்படி நடிக்கத் துணிந்தார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நித்யா மேனன் நடிக்க வந்ததிலிருந்து தனக்கான கதாபாத்திரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பவர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:03 pm

ராக்கி

நித்யா மேனன் நடிக்க வந்ததிலிருந்து தனக்கான கதாபாத்திரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். அவரது படங்களில் கதாநாயகிக்கு முக்கியமான பங்களிப்பு இருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வருகிறார் நித்யா மேனன். 

Story image

இயக்குநர் மணி ரத்னத்தின் ஓகே கண்மணியில் அவர் ஏற்று நடித்த தாரா எனும் பாத்திரத்தை அனைவரும் ரசித்தார்கள். அப்படத்தில் அவர் ஒரு ஆர்கிடெக்ட். சுயம் நாடும் துணிச்சலான பெண்ணாக அப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

Story image

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவர் நடித்த காஞ்சனா 2 என்ற படத்திலும் நித்யா மேனன் ஏற்ற பாத்திரம் எளிதில் யாரும் ஒப்புக் கொண்டு நடிக்க மாட்டார்கள். மாற்றுத் திறனாளியாக ரசிகர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய கதாபாத்திரம் அது.

Story image

அதன்பின் கடந்த ஆண்டு வெளிவந்த மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பஞ்சாபி பெண்ணாக நடித்தார். படத்தில் சிறிது நேரமே தோன்றினாலும், அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. நித்யா மேனன் அப்படத்தில் தனது சொந்தக் குரலில் பேசினார் என்பதும் சிறப்பு. 

Story image

இப்படி பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நித்யா மேனன், தான் அடுத்து நடிக்கவுள்ள கதாபாத்திரத்தைப் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். முற்றிலும் வித்யாசமான கதைக் களன்களும் கதாபாத்திரங்களும் உடைய படங்கள் அவை. அதில் ஒன்று தெலுங்குப் படம் என்றும் தெரிவித்தார் நித்யா மேனன்.

Story image

நித்யா மேனன் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் (ஓரினச் சேர்க்கையாளராக) அத்திரைப்படத்தில் நடித்திருக்கிறாராம். அப்படத்திற்காக நித்யாவின் இணையாக நடிக்கும் நடிகையுடன் உதட்டு முத்தக் காட்சிகளிலும் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் காட்சியை சென்சாரில் ஏற்பார்களா என்று தெரியாத நிலையில், இது போன்ற கலாச்சார அதிர்ச்சி அளிக்கும் திரைப்படங்களை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்றும் தெரியவில்லை என்கிறது டோலிவுட் தரப்பு.

Story image

இந்தியில் தீபா மேத்தா இயக்கத்தில் நந்திதா தாஸ் ஷாபனா ஆஸ்மி நடிப்பில் வெளியான ஃபயர் படம் வெளிவந்து கிட்டத்தட்ட இருபதாண்டுகள் முடிந்த நிலையில் திடீரென்று நித்யா மேனனின் இந்தப் படம் வெளிவந்தால் புதிய சர்ச்சைகளைக் கிளப்பலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Story image

படத்தைப் பற்றி அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. நித்யா மேனன் துணிச்சலான சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் முன்னோடியாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.