சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காற்றில் கலந்துவிட்ட காவியத் தாரகை! நடிகை ஸ்ரீதேவியின் மறக்க முடியாத 5 திரைப்பாடல்கள்!

எண்பதுகளில் நிறைய குடும்பங்களில் ஸ்ரீதேவி என்று மகள்களுக்கு பெயர் வைத்த தகப்பன்மார்களை நாம் அறிவோம்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:22 pm

சினேகலதா

எண்பதுகளில் நிறைய குடும்பங்களில் ஸ்ரீதேவி என்று மகள்களுக்கு பெயர் வைத்த தகப்பன்மார்களை நாம் அறிவோம். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இந்தியத் திரையையே ஆளுமை செய்தவர் நடிகை ஸ்ரீதேவி. கள்ளமில்லாத சிரிப்பும், ஆர்ப்பரிக்காத இயல்பான நடிப்பும் சினிமா என்பதையும் மீறி ரசிகர்களின் மனத்தில் பதிந்துவிட்ட ஓர் முகம்.

ஸ்ரீதேவியின் பூத உடல் இந்த மண்ணைவிட்டு அகன்றாலும், அவர் விட்டுச் சென்ற அவரது பலவிதமான முகபாவங்கள் ரசிகர்களின் மனத்தில் நீங்காமல் நிலைத்திருக்கும். அவர் ஆயிரம் பாடல்களுக்கு மேல் கூட நடித்திருக்கலாம். ஆனால் சில பாடல்கள் நமக்கே நமக்கு என பிரத்யேகமானவை. அந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தை நம் கண்முன் நிறுத்தக் கூடியவை. அவ்வகையில் என்னால் ஒருபோதும் மறக்க முடியாத நான் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்கள் இவை....

ஓ...பிரியா.....ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே... அனுமான் உன்னைக் காண...(ஜேசுதாஸின் குரலில், ரஜினியின் நடிப்பில் இந்தப் பாடல் அதே படத்தில் சூப்பர் ஹிட்டான மற்ற பாடல்களுக்கு மாற்று குறையாதது. ஸ்ரீதேவி) 

YouTube video thumbnail

பூங்காற்று புதிரானது...புது வாழ்வு சதிராடுது.. கண்ணே கலைமானே பாடலில் வரும் ஒரு வரியில் ஏனோ தெய்வம் சதி செய்தது என்ற வரியை நாம் அடிக்கடி நினைப்பதுண்டு. (இப்போதும் கூட....)

YouTube video thumbnail

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது....(இசைகின்றது...இன்னும்....)

YouTube video thumbnail

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது....என்றென்றும் மறக்க முடியாத காட்சிகள் 

YouTube video thumbnail

வசந்த கால நதி அலைகள்...வைரமணி நீர் அலைகள்....(அலை அலையால் நினைவு..) 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.