நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

'இப்படி பிண்றீங்களேம்மா! டிடியை புகழ்ந்து தள்ளிய நடிகர் ஆர்யா!

கெளதம் மேனன் தனது ஒன்றாக ஒரிஜினல்ஸ் மூலம் இயக்கி வெளியிட்டுள்ள இரண்டாவது காணொலி உலவிரவு

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:17 pm

ராக்கி

கெளதம் மேனன் தனது ஒன்றாக ஒரிஜினல்ஸ் மூலம் இயக்கி வெளியிட்டுள்ள இரண்டாவது காணொலி உலவிரவு (டேட்டிங் நைட்). இதில் மலையாள ஹீரோ டொவினோ தாமஸ் மற்றும் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி இருவரும் நடித்துள்ளனர். காதலா் தினத்தை முன்னிட்டு இந்தப் பாடலின் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடியோவில் காதலர்களான திவ்யாவும் (டிடி) தருண் (டொவினா தாமஸ்) சாட்டிங்கில் ஊடலுக்குப் பிறகு அன்றைய இரவில் டேட்டிங் செய்கின்றனர். பேருந்தில் காதல் சொட்டச் சொட்ட பயணம் செய்கிறார்கள். டின்னரை ஒரு நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, நள்ளிரவு நட்சத்திரம் ஜொலிக்க அருகருகே படுத்து கட்டித் தழுவுகிறார்கள். அழகிய வரிகளும், கண்ணுக்கு இனிய காட்சிகளுமாக இந்தப் பாடல் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வைரலானது. 

Story image

இந்நிலையில் சமீபத்தில் இந்த விடியோவைப் பார்த்து ரசித்த நடிகர் ஆர்யா டிடியின் நடிப்பை பற்றியும் ரொமான்ஸ் பற்றியும் புகழ்ந்து தள்ளிவிட்டார். ஆா்யாவுக்கு நன்றி தெரிவித்ததோடு ரொமான்ஸ் பற்றி நீங்க பாராட்டுவது எனக்கு ரொம்பவே சந்தோஷம் என்று பதில் ட்வீட்டியிருக்கிறார் டிடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.