நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ள கட்சித் தலைவர்!

நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியை துவங்க இருக்கிறார். தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:16 pm

ராக்கி

நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியை துவங்க இருக்கிறார். தற்போது அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 'வரும் 21-ம் தேதி எனது அரசியல் பயணத்தை ராமேசுவரத்தில் இருந்து தொடங்குகிறேன். அன்றைய தினமே கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். பின்னர் அன்று மாலை மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் நான் பேச உள்ளேன். சினிமாவிலிருந்து விலகுகிறேன் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த தகவலில் உண்மை இல்லை. சினிமாவில் இருந்து ஒதுங்குவது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சமீபத்தில் கூறியிருந்தார் கமல்ஹாசன்.

Story image

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு நடிகர் கமல்ஹா சனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற அந்தப் புத்தகம் திருமாவளவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளி வரவுள்ளது. இந்தப் புத்தகத்தை வெளியிட நடிகர் கமல் ஹாசனுக்கு தம் கட்சியின் சார்பில் திருமாவளவன் அழைத்துள்ளார். இந்த அழைப்பினை ஏற்று புத்தக வெளியீட்டு நிகழ்வில் கமல் பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.