சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆர்யாவைத் தொடர்ந்து இணையத்தில் ஜோடியைத் தேடும் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா!

ரசிகர்களை அவ்வப்போது அதிரடியாக வியப்பில் ஆழ்த்தச் செய்வதில் வல்லவர் பிரியங்கா சோப்ரா.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:15 pm

உமாகல்யாணி

ரசிகர்களை அவ்வப்போது அதிரடியாக வியப்பில் ஆழ்த்தச் செய்வதில் வல்லவர் பிரியங்கா சோப்ரா. காதலர் தினப் பரிசாக தன்னுடைய  கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு என்னுடைய வாலண்டினாக இருக்க விருப்பமா? என்று கேட்டுள்ளார்.

Story image

அழகான சிவப்பு நிற ஆடையில் வசீகரிக்கும் பார்வையுடன் இப்படிப்பட்ட கேள்வியை கேட்டால் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன? பதில் மழை பொழிந்துவிட்டார்கள். வாவ் என்றும் நோ என்றும் பதில்கள் வந்த நிலையில் குவாண்டிகோ தொடரில் அவரது சக நடிகரான ரஸல் டொவி பிரியங்காவிற்கு இன்ப அதிர்ச்சியாக சுடச் சுட ஒரு பாக்ஸ் டொனட்ஸை பரிசாக அனுப்பினார். 

Story image

தன்னுடைய திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பிரியங்கா கூறியது, ‘திருமணமே வேண்டாம் என்று சொல்பவதற்கு நான் சந்நியாசியா என்ன? நிச்சயம் என்னுடைய ஜோடியை கண்டுபிடிப்பேன். ஆனால் எப்போது என்று தெரியாது. இப்போதைக்கு நான் சிங்கிள்தான்!

Story image

நீண்ட காலமாக சிங்கிளாக இருப்பதால், என் மீதான மற்றவர்களின் கவனத்தை அதிகம் பெறுகிறேன். ஆனால் இதை வைத்து என்ன செய்வது என்றும் தெரியவில்லை. ஆனால் அது எனக்கு பிடிக்கவும் செய்கிறது. நான் ஒரு பெண். எனக்கும் ஆசைகள், தேடல்கள் உண்டு. ஆனால் என் மனத்தை முழுமையாக கொள்ளையடிக்கும் வகையில் இதுவரை ஒருவரையும் நான் சந்திக்கவில்லை. 

Story image

சில ஆண்டுகள் முன்பு ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, மீண்டும் நான் தனிமையானேன். என் வாழ்க்கையில் என்னை வானளாவ புகழ்ந்து தள்ளிபவர்களை சந்தித்துள்ளேன்.

Story image

எனக்குப் பிடித்தவர்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன். என்னை காதலிக்க முயற்சி செய்து பின்னால் சுற்றுபவர்களை ரசித்திருக்கிறேன். ஆனால் இதுவரை என்னை உடைத்து எறியக் கூடிய  ஒரு அழகான காதலை எதிர்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Story image

அத்தகைய ஒரு ஆழமான உணர்வுக்காகத் தான் காத்திருக்கிறேன்’ என்று தனது எதிர்கால காதலைப் பற்றி பகிர்ந்து கொண்டார் இந்த முன்னாள் உலக அழகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.