சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஹாலிவுட் நடிகர் டாம் க்ருஸின் மிஷன் இம்பாஸிபிள் - ஃபால் அவுட் ட்ரெய்லர் இதோ!

ஹாலிவுட்டில் சீக்வல், ட்ரையாலஜி வகைப் படங்கள் மிகவும் பிரபலம். ஒரு படம் தன்னளவில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:10 pm

உமாகல்யாணி

ஹாலிவுட்டில் சீக்வல், ட்ரையாலஜி வகைப் படங்கள் மிகவும் பிரபலம். ஒரு படம் தன்னளவில் நிறைவாகவும் அதே சமயம் அடுத்தடுத்து  படமாக்கம் செய்யக் கூடியவகையில் முற்றில்லாமல் இருக்கையில் அதன் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் எடுக்கப்படும். க்றிஸ்டபர் நோலானின் பேட்மான் (Bat Man Begins, The Dark Knight, The Dark Knight Rises) உலகப் புகழ்ப்பெற்ற ட்ரையாலஜி வரிசை.

Story image

போலவே பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே எனும் படமும் இதற்குச் சமீப கால உதாரணம். சில படங்கள் ட்ரையாலஜியையும் தாண்டி அதன் நான்காம், ஐந்தாம் பாகங்கள் வெளிவரும் போது அவை சீரிஸாக மாறுகிறது. இந்த சீரிஸ் வகைப் படங்களில் இயக்குநர்கள் மாறலாம் நடிகர்கள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் படத்தின் மையம், கதாபாத்திரம் மற்றும் ஐடியாலஜி மட்டும் மாறாது.

Story image

ஜேம்ஸ்பாண்ட், ஸ்பைடர்மேன், ஹாரி பாட்டர், ஜுராஸிக் பார்க், தி பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், எக்ஸ் மென்,  உள்ளிட்ட படங்களை  இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவ்வகையில் மிஷன் இம்பாஸிபிள் உள்ளடங்கும். மிஷன் இம்பாஸிபிள், மிஷன் இம்பாஸிபிள் 2, மிஷன் இம்பாஸிபிள் III, மிஷன் இம்பாஸிபிள் கோஸ்ட் ப்ரோடொகால், ரோக் நேஷன், ஆகிய படங்கள் இந்த வரிசையில் 1996-ம் ஆண்டிலிருந்து 2015 வரை வெளிவந்துள்ளது. முதல் பாகத்திலிருந்து கடைசியாக வெளியான இதன் ஐந்தாம் பாகம் மிஷன் இம்பாஸிபிள் ரோக் நேஷன் வரை அனைத்துமே  உலகத் திரை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன.

Story image

இந்நிலையில் இதன் ஆறாம் பாகம் மிஷன் இம்பாஸிபிள் ஃபால் அவுட் மீண்டும் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. காரணம் Mission Impossible என்றாலே டாம் க்ரூஸ் எனும்படியாக இந்த தொடர் சீரிஸின் நிகரற்ற நாயகனாக டாம் க்ரூஸ் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டுள்ளார். இந்த ஆறாம் பாகத்தை இயக்குபவர் கிரிஸ்டோபர் மெக்கியூரி. விங் ரேஹம்ஸ், சைமன் பெக், மைகேல் மோனக்ஹன், ரெபெக்கா ஃபெர்குசன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஜூலை 27-ம் தேதி வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Story image

இத்தொடர் படங்களின் கதை ஒரு தொலைக்காட்சி தொடரை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. டாம் க்ருஸ் இதில் ஈதன் ஹண்ட் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வழக்கம் போல இந்த பாகத்திலும் மெய்சிலிர்க்கும் சாகஸக் காட்சிகள் இடம்பெறுகிறது. கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்புணர்வுடன் டாம் க்ரூஸ் இப்படத்தில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு சண்டை காட்சியில் டாம் க்ருஸின் காலில் அடிபட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டாம் க்ரூஸ் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள ட்ரெய்லர் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.