சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்த ராணி முகர்ஜி நடித்த படத்தின் ரிலீஸ் தேதி ஏன் தள்ளிப்போனது?

நடிப்பு, திருமண வாழ்க்கை, குழந்தைப் பேறு என பரபரப்பாக இருந்த ராணி முகர்ஜி, 2014-ல்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:08 pm

உமாகல்யாணி

நடிப்பு, திருமண வாழ்க்கை, குழந்தைப் பேறு என பரபரப்பாக இருந்த ராணி முகர்ஜி, 2014-ல் வெளிவந்த மர்தாணி படத்துக்குப் பின் திரைப்படங்களில் நடிக்கவில்லை. நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் தற்போது யஷ் ராஜ் பிலிம்ஸ் பேனரில் மணீஷ் ஷர்மா தயாரிப்பில் சித்தார்த் பி மல்ஹோத்ராவின் இயக்கத்தில் ஹிச்கி (Hichki) என்ற படத்தில் நடித்துள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரமாக அப்படம் இருக்கவே மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ராணி.


இப்படத்தைப் பற்றி ராணி முகர்ஜி கூறுகையில், ‘நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பலவீனம் இருக்கும். அது நம்மை இயலாமைக்குள் தள்ளி ஓரேடியாக நம்மை வீழ்த்தப் பார்க்கும். அதற்குக் காரணம் சூழலாக இருக்கலாம் இல்லை வேறு ஏதாவது தற்காலிகமான பின்னடைவாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் மீறி நிச்சயம் நம்மால் வெற்றியாளராக மாற முடியும் என்ற பாசிட்டிவ் விஷயத்தை உள்ளடக்கிய படம் இது. கதை பிடித்துவிட்டதால் உடனே நடிக்க சம்மதித்தேன்’என்றார் ராணி முகர்ஜி. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், முதலில் பிப்ரவரி 23-ம் தேதி வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது முழு ஆண்டுத் தேர்வு பரபரப்பில் குழந்தைகளும் பெற்றோர்களும் இருப்பார்கள் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.