கேரள வெள்ள நிவாரணம்: நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி!
கேரள வெள்ள நிவாரணத்துக்கு நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்...


கேரள வெள்ள நிவாரணத்துக்கு நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடும் மழை, வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்து வரும் அம்மாநில மக்களுக்கு தமிழ்த் திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, தனுஷ். விஜய்சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நிதி வழங்கியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் ரூ. 15 லட்சம் நிதி வழங்கியுள்ளார். நடிகர் உதயநிதி ரூ. 10 லட்சத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். இயக்குநர் ஷங்கர் ரூ. 10 லட்சமும், அருள்நிதி ரூ.5 லட்சமும் நிதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ. 70 லட்சம் வழங்கியுள்ளார் விஜய். இவருக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். இதனால் மற்ற தமிழ் நடிகர்களை விடவும் அதிக தொகை அளித்துள்ளார் விஜய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...