15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கோலமாவு கோகிலா படத்தைப் பார்த்து ரசித்து சிரித்தேன் என்று சொன்ன விஐபி இவர்தான்!

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2018, 6:42 am

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத். கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் கோலமாவு கோகிலா வெளியானது.

இப்படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ப்ரோமோஷனுக்காக வெளியான 'எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சு' என்ற பாடல்  கோலமாவு கோகிலா படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. கோலமாவு கோகிலாவாக நயன்தாரா வாழ்ந்திருக்கிறார் எனலாம். அப்படியொரு ரகளையான பாத்திரம். முதற்காட்சி முதல் இறுதிக்காட்சி வரை அப்பாவித்தனமான முகத்தை வைத்துக்கொண்டு சிக்கலான வியூகங்களுக்குள் சாமர்த்தியமாக இவர் பயணிக்கும் விதம் அபாரம். நயன்தாரா என்றல்ல, ஒவ்வொரு பாத்திரங்களுக்குமே பிரத்யேகமான குணாதியசத்தையும் தோரணையையும் தர இயக்குநர் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். நகைச்சுவையை அதகளப்படுத்தியுள்ள இயக்குநருக்கு பலத்த பாராட்டுக்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை போனில் அழைத்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். 'சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்' என்று நெல்சன் திலீப்குமாரிடம் படம் பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.