நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மாணவர்களுடன் பைக்கில் ஊர்வலம் போகும் விஜய்: இணையத்தில் வைரலான புகைப்படம் 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படத்திற்காக மாணவர்களுடன் விஜய் பைக்கில் ஊர்வலம் போகும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:53 pm

DIN

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படத்திற்காக மாணவர்களுடன் விஜய் பைக்கில் ஊர்வலம் போகும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது. 

விஜய் இப்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில், இன்னும் பெயர் சூட்டப்படாத படம் ஒன்றில்   நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக ராதாரவி நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஸ்ட்ரைக் காரணமாக தடைப்பட்டிருந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு, தற்பொழுது சென்னையில் நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இரவு நேரத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது.

Story image

அப்பொழுது கல்லூரி மாணவர்களுடன் பைக் ஒன்றில் விஜய் ஊர்வலமாக போவது போல் ஒரு காட்சியை படமாக்கப்பட்டது. அந்த காட்சியை யாரோ புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட, அது தற்பொழுது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.