சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மூன்று முறை ஆஸ்கர் வென்றவர் 'சீதக்காதி’யில் விஜய் சேதுபதிக்கு ஒப்பனை கலைஞராகிறார்!

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது படம் சீதக்காதி. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:53 pm

உமாகல்யாணி

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது படம் சீதக்காதி. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட வெற்றிக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணைய முடிவு செய்தனர். அதன் பின்னரே 'சீதக்காதி’ படக் கதை முடிவானது. இந்தப் படம் பற்றி கோலிவுட்டில் பலவிதமான செய்திகள் வெளிவந்தபடி உள்ள நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி, இதில் விஜய் சேதுபதி நாடக நடிகரான ‘அய்யா’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். அய்யாவின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்புத்தான் இப்படத்தின் கதை. விஜய் சேதுபதி இதில் ஸ்பெஷல் தோற்றத்துடன் 75, 50 மற்றும் 30 வயதினராக நடிக்கவிருக்கிறார்.

Story image

75 வயது விஜய் சேதுபதிக்கு அதிகக் காட்சிகள் இருக்குமாம். வயதான அய்யாவின் நினைவுப் பதிவாக இக்கதை இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். விஜய் சேதுபதி அந்த 75 வயது கதாபாத்திரத்தில் தத்ரூபமாகக் காட்சிப்படுத்த, படக் குழுவினர் லாஸ் ஏஞ்சலஸ் வரை பயணம் செய்து உலகப் புகழ்ப் பெற்ற ஒப்பனைக் கலைஞரான க்ரெக் கெனானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Story image

க்ரெக் இதுவரை மூன்று முறை ஆஸ்கர் விருது வாங்கியுள்ள மேக் அப் நிபுணர். மிஸஸ் டவுட்ஃபயர், தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் மற்றும் ப்ராம் ஸ்டாக்கர்’ஸ் டிராகுலா ஆகிய படங்களில் சிறப்பான பங்களிப்புக்கு அவ்விருதினை வாங்கியுள்ளார்.  

'விஜய் சேதுபதியின் தோற்றத்தை விஸ்வநாத் சுந்தரம்தான் வடிவமைத்துள்ளார் எனினும் அப்பாத்திரத்தை மேலும் மெருகேற்ற விரும்பிய படக்குழுவினர் க்ரெக்கை அணுகினோம். விஜய் சேதுபதிக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும்' என்றனர் படக்குழுவினர்.

Story image

க்ரெக் இதற்கு முன் ஃபேன் படத்தில் ஷாரூக் கானுடனும், கபூர் அண்ட் சன்ஸ் படத்தில் ரிஷி கபூருடனும் பணியாற்றியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.