டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மெர்சல் படத்துக்கு ரூ. 200 கோடி வசூலா?: அபிராமி ராமநாதன் ஆச்சர்யம்!

சென்னை நகரத்தில் இந்தப் படத்துக்கு எவ்வளவு வசூல் கிடைத்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்... 

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:59 pm

எழில்

மெர்சல் படம் ரூ. 200 கோடி வசூலைத் தொடவுள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு அபிராமி ராமநாதன் ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளரும் திரையரங்க அதிபருமான அபிராமி ராமநாதன், மெர்சல் படத்தின் வசூல் குறித்து சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மெர்சல் வசூல் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்ததாவது:  

நாங்கள் 1976-ல் இருந்து இந்தத் துறையில் உள்ளோம். முன்பு, பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு 20% வரை டிக்கெட்டுகள் ஒதுக்கிவிடுவோம். எம்ஜிஆர் படத்துக்கு நூறு ரூபாய் டிக்கெட் விற்கிறார்கள் என மக்கள் வியந்தால் எனக்கு அந்த இடத்தில் இலவசமாக விளம்பரம் கிடைக்கிறது. இதனாலேயே இன்று ரூ. 150 கோடி, ரூ. 200 கோடி வசூலாகிறது என்று சொல்கிறார்கள். இது சிதம்பர ரகசியம். யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. சென்னை நகரத்தில் இந்தப் படத்துக்கு எவ்வளவு வசூல் கிடைத்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். தயாரிப்பாளருக்கு இன்னும் அந்த வசூல் நிலவரங்களை நான் தரவில்லை. படம் ஓடிமுடிந்தபிறகுதான் வசூல் விவரங்கள் அளிக்கப்படும். அதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதமாகும். அதேபோல மற்ற ஊர்களிலும் எவ்வளவு வசூலாகிறது என்பதைத் தயாரிப்பாளருக்குச் சொல்லவேமாட்டோம். இந்த நிலையில் ரூ. 200 கோடி வசூல் என எப்படி ஒருவர் சொல்கிறார்? இதைச் சொன்னால் யாராலும் மறுக்கவும் முடியாது. இது ஒரு இலவச விளம்பரம். மற்றபடி 99% உண்மை கிடையாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.