சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் எப்போது?

எஸ். ஜஸ்டின் செல்வராஜ் பற்றி ரசிகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது திரைப்பெயர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:58 pm

உமாகல்யாணி

எஸ். ஜஸ்டின் செல்வராஜ் பற்றி ரசிகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது திரைப்பெயர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஒன்று - எஸ். ஜே. சூர்யா. இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் நடிகராகத்தான் விரும்பியிருக்கிறார். கிழக்குச் சீமையிலே படத்தில் பெயர் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யாவின் வளர்ச்சி மெர்சலில் உலகறிந்த வில்லனாக பெயர் பெற்றதற்குக் காரணம் அவரது கடின உழைப்பும் சினிமா மீது அவருக்கு இருக்கும் அளவிடமுடியாத பற்றும் தான்.

Story image

இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற வரிசையில் தற்போது நடிகரும் ஆகிவிட்டவர். சாதிக்க வேண்டும் என்ற தன் லட்சியத்துக்குத் திருமணம் தடையாகிவிடலாம் என்று இதுவரை அவர் மணம் புரிந்து கொள்ளவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. 

‘இறைவி’ படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானாலும் அப்பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தி, அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் எஸ்.ஜே.சூர்யா. அண்மையில் வெளியான ‘ஸ்பைடர்’ மற்றும் மெர்சல் படங்களில் வித்யாசமான வில்லன் வேடத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தமிழ்த் திரையுலகில் தடம் பதித்த வில்லன்கள் வரிசையில் அவரது பெயரை இணைத்துவிட்டது.

Story image

வில்லன், குணசித்திர நாயகன் அல்லது கதை நாயகன் என எந்த பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை வெகு அழகாகப் பொருத்திக் கொள்ளும் திறன் வெகு சில நடிகர்களுக்கே உள்ளது. எஸ்.ஜே.சூர்யாவின் இயல்பான நடிப்பும், அசத்தலான உடல்மொழியும் அவரை அந்த பட்டியலில் இணைத்துள்ளது. அவர் இயக்குனரானதே தான் நடிகராக வேண்டும் என்பதற்காகத் தான் எனும் போது, நடிப்பில் தன்னை மெருகேற்றிக் கொள்வதில் அக்கறையும் கவனமும் காட்டி வருகிறார் என்பது அவரது சமீபத்திய படங்களில் தெரிகிறது. தற்போது, எஸ்.ஜே.சூர்யா வசம் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் 'மாயா’ புகழ் அஸ்வின் சரவணனின் ‘இறவாக்காலம்’ஆகிய படங்கள் உள்ளன.

தமிழ்த் திரையில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு.  ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கும் போகன் தெலுங்கு ரீமேக்கில் அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. 

Story image

இதற்கிடையில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படக்குழுவினரால் வெளியிடப்பட்ட அதன் பாடல்கள் மற்றும் டிரையிலர் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நவம்பர் 3-ம் தேதி வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நந்திதா, ரெஜினா என இரண்டு கதாநாயகிகள். ‘க்ளோ ஸ்டுடியோஸ் – எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனனின் தயாரிப்பு நிறுவனமான 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள
இதற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே. படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

நடிப்பிற்கு தன்னை ஒப்புக்கொடுத்தவர்கள் ஒரு படத்தில் தான் என்னவாக இருக்கிறோம் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. திரையில் தோன்றும் அவ்வுருவம் ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பெற வேண்டும் என்றே மெனக்கிடுவார்கள். ஆசை படத்தில் ஒரு காட்சியில் ஆட்டோ ஓட்டுனராக நடித்த எஸ்.ஜே.சூர்யா இன்று ஒரு திரைப்படத்தை மொத்தமாகத் தாங்கும் ஒரு கதை நாயகனாக உருவாகியிருப்பது திரைப்படங்களின் மீதான அவரது தீராத ஆசையே காரணம்.

Story image

அவ்வகையில், நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.