நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ரஜினி படத்துக்கு காலா எனப் பெயரிட்டது ஏன்? இயக்குநர் பா.இரஞ்சித் விளக்கம்!

மும்பையில் வசிக்கும் நெல்லை வட்டார மக்களின் வாழ்க்கையை சொல்வது காலா படம்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:36 pm

எழில்

தனுஷ் தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கும் ரஜினி படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலா - கரிகாலன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை இத்தகவல் வெளியிடப்பட்டது. காலா படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 28ம்தேதி தொடங்குகிறது.

இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

இத்தலைப்பு குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கூறியதாவது: கரிகாலன் என்கிற பெயரின் சுருக்கமே காலா. ரஜினிக்குப் பிடித்த பெயர் என்பதால் காலா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வட்டாரங்களில் எமனை, காலா சாமியாக வழிபடுவார்கள். மும்பையில் வசிக்கும் நெல்லை வட்டார மக்களின் வாழ்க்கையை சொல்வது காலா படம். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.