/

இரண்டாவதுமுறையாக இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகப் போகும் பிரபல பாலிவுட் நடிகை!

பல குழந்தைகளுக்குப் பெற்றோராக இருக்கக் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்...

News image
Updated On :24 மே 2017, 7:00 am

நோ எண்ட்ரி, கோல்மால் ரிடர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி (35), இரண்டாவதுமுறையாக இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகப் போகிறார்.

பீட்டர் ஹாகைத் திருமணம் செய்துகொண்ட செலினா ஜெட்லிக்கு 2012-ம் வருடம் வின்ஸ்டன், விராஜ் என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. 

இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் செலினா ஜெட்லிக்கு இம்முறையும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கவுள்ளன. 

துபாயில் உள்ள செலினா இதுகுறித்துப் பேட்டியளித்ததாவது: ஸ்கேன் எடுத்த மருத்துவரிடம், இந்தமுறையும் இரட்டைக் குழந்தைகளா என்று கேட்டார் பீட்டர். அதற்கு ஆம் என்று பதிலளித்தார் மருத்துவர். இதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தோம். அக்டோபரில் குழந்தைகள் பிறக்கவுள்ளன.

இருவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். எனவே பல குழந்தைகளுக்குப் பெற்றோராக இருக்கக் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றே எண்ணிக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.