சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஸ்ரீதேவியின் 'Mom' திரைப்படம் ஜூலை 7 ல் ரிலீஸ்!

ஸ்ரீதேவி முதல்முறையாக கேமராவுக்கு முன்பு நின்று நடித்த நாளான ஜூலை 7 ஆம் தேதியை ரிலீஸ் தேதியாக முடிவு செய்திருக்கிறாராம் அவரது கணவர் போனி கபூர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:32 pm

சரோஜினி

ஸ்ரீதேவியை தமிழ் ரசிகர்கள் கடைசியாக திரையில் எப்போது பார்த்தார்கள்? புலி திரைப்படத்தில் பார்த்திருப்பார்கள். பாலிவுட்டில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு வெளியான ‘இங்லீஷ் விங்லீஷில்’ கண்டிருப்பார்கள். இந்த ஆண்டு ஸ்ரீதேவியின் ‘Mom’ திரைப்படம் வெளியாகவிருக்கிறதாம். அதுவும் எப்போது தெரியுமா? 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி முதல்முறையாக கேமராவுக்கு முன்பு நின்று நடித்த நாளான ஜூலை 7 ஆம் தேதியை ரிலீஸ் தேதியாக முடிவு செய்திருக்கிறாராம் அவரது கணவர் போனி கபூர். 1967 ஆம் ஆண்டு அதே ஜூலை 7 ல் தான் ஸ்ரீதேவி தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனால் திரையுலகப் பிரவேஷத்தில் தன் மனைவியின் ஸ்பெஷல் தினங்களில் ஒன்றான அன்றே ‘Mom’ திரைப்படத்தை வெளியிடலாம் என போனி கபூர் முடிவு செய்திருக்கிறார். 

Mom படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது...

YouTube video thumbnail

நேரடி இந்திப் படமான Mom திரைப்படம் தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்ய்யப்பட வேண்டும் என்பது போனி கபூரின் விருப்பம். எனவே இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் டப் செய்யப்படவுள்ளதாகக் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.