சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

'அப்பா' போல சமுத்திரக்கனியின் 'தொண்டன்' படமும் ஹிட் ஆகுமா?

அப்பா ஹிட் படத்துக்குப் பிறகு வெளியாகும் சமுத்திரக்கனி படம் இது.

News image
Updated On :2 மே 2017, 7:09 am

அப்பா படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, நடிக்கும் படம் "தொண்டன்.' சுனைனா, சூரி, விக்ராந்த், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்கள். 

படம் குறித்து சமுத்திரக்கனி கூறியதாவது: தொண்டன் என்ற தலைப்பைப் பார்த்து விட்டு, இது அரசியல் படமா? என்று கேட்கிறார்கள். இதில் அரசியல் துளியும் கிடையாது. பிறருக்கு உதவி செய்கிற யாவருமே தொண்டன் என்பதை களமாக கொண்டு, இக்கதையை எழுதியுள்ளேன். எனக்கு நாளிதழ் செய்திகளை ஒரு வரி கூட விடாமல் படிக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படிப் படித்துக் கொண்டிருந்த போது கரூரில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அங்கு ஒரு கல்லூரியில் உள்ளே நுழைந்த ஒருவன் 60 மாணவ, மாணவர்கள் நிரம்பிய வகுப்பறையில் புகுந்து ஒரு மாணவியின் தலையில் கட்டையால் தாக்கியிருக்கிறான். அதை ஒருவர் கூடத் தடுக்கவில்லை. அப்படி ஒருவர் துணிச்சலாகத் தடுத்து இருந்தால் கூட அந்த மாணவி இன்று உயிருடன் இருந்து இருப்பார். அந்தச் சம்பவத்தை இதில் ஒரு காட்சியில் வைத்து இருக்கிறேன். மற்றபடி இது நிஜமும், கற்பனையும் கலந்து மனித உணர்வுகளைப் பேசக்கூடிய படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த வாரம் மே 5-ம் தேதி தொண்டன் படம் வெளியாகிறது. அப்பா ஹிட் படத்துக்குப் பிறகு வெளியாகும் சமுத்திரக்கனி படம் இது.

பாகுபலி 2 மயத்தில் இருக்கும் ரசிகர்கள் அப்பா போல தொண்டனுக்கும் ஆதரவு தருவார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.