பாகுபலி 2 படம் மெகா ஹிட். இந்திய சினிமாவின் நெ.1 இயக்குநர் ஆகிவிட்டார் இயக்குநர் ராஜமெளலி. அவர் ரஜினியை வைத்து படம் இயக்கினால் அது எப்படி இருக்கும்?
இப்படி யோசித்துள்ளீர்களா?
பிரேமம் புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது:
இயக்குநர் ராஜமெளலி, ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவார் என நம்புகிறேன். அப்படி நடந்தால், அது உலக அளவிலான அவதார் பட வசூல் இரண்டாம் இடத்துக்குச் சென்றுவிடும் என்று கூறியுள்ளார்.
இயக்குநர் ராஜமெளலி இதற்கு முன்பு தமிழில் படம் இயக்குவது குறித்து கூறியிருந்தார். அப்போது தான் தமிழில் படம் இயக்குவதா இருந்தால் அது ரஜினியுடன்தான். கையில் கதை எதுவும் இல்லாவிட்டாலும் அவருடன் பணிபுரியவேண்டும் என்பது நீண்டநாள் விருப்பம் என்று கூறியிருந்தார்.
பாகுபலி படம் பார்த்த ரஜினி, ராஜமெளலிக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ராஜமெளலியும் பதில் அளித்துள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும்போது, ரஜினி - ராஜமெளலி கூட்டணி வருங்காலத்தில் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


