அமீர்கானின் டங்கல் படம் உலகளவில் ரூ. 2000 கோடி வசூலைப் பெற்று மகத்தான சாதனை செய்துள்ளது.
அமீர் கான், சாக்ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
டங்கல் படம் சமீபத்தில் சீனாவில் வெளியானது. அங்கு மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு வேறெந்த இந்தியப் படமும் சீனாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை. சீனாவில் மொத்தம் 40,000 திரையரங்குகள் உள்ளன (இந்தியாவில் 8500). டங்கல் படம், Shuai Jiao Baba என்கிற பெயரில் சீனாவில் வெளியானது. சீனாவில் முதல் வாரம் ரூ. 187 கோடியை வசூலித்த டங்கல், தற்போது இந்தியப் படங்கள் எட்டாத ஓர் உயரத்தை எட்டியுள்ளது.
அமீர்கானின் டங்கல் படம் சீனாவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று மகத்தான சாதனை செய்து வருகிறது. இந்தியாவிலேயே இந்த வசூலை அடையாத டங்கல் படம் சீனாவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. சீனாவில் தனது 53-வது நாளிலும் ரூ. 2.5 கோடி வசூலித்தது. அப்போது ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 2000 கோடி என்கிற இந்தியப் படங்களால் கனவு முடியாத வசூலை எட்டியுள்ளது. சீனாவில் ஓர் இந்தியப் படம் இத்தகைய வசூலை பெற்றிருப்பது இதுவரை கண்டிராத ஒன்று. சீனாவில் ஹாலிவுட் படமாக அல்லாத ஒரு படம் சூப்பர் ஹிட் ஆனது என்றால் அது டங்கல் படம் தான்.
டங்கல் ரூ. 2000 கோடி
சீனா: ரூ. 1214 கோடி
தைவான்: ரூ. 41 கோடி
இந்தியா உள்ளிட்ட இதர நாடுகள்: ரூ. 745 கோடி
மொத்தம் = ரூ. 2000 கோடி
*
உலகளவில் ரூ. 1000 கோடி வசூலைப் பெற்ற முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை பாகுபலி 2 பெற்றது. தற்போது டங்கல் படம் ரூ. 2000 கோடி வசூலை எட்டி இந்தியத் திரையுலகை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டுசென்றுள்ளது.
இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனவே, அதைவிடவும் டங்கல் வசூலிக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நான்கு நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூலை எட்டிய டங்கல், தற்போது பல சாதனைகளை நிகழ்த்தி சீனத் திரையுலக வரலாற்றிலும் மகத்தான சாதனை செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


