இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சிவகார்த்திகேயன் - சமந்தா படத்தின் தொலைக்காட்சி உரிமையைப் பெற்ற சன் டிவி!

இப்படத்தின் படப்பிடிப்பே சமீபத்தில்தான் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதன் தொலைக்காட்சி உரிமையைப் பெற்றுள்ளது சன் டிவி!

News image
Updated On :28 ஜூன் 2017, 9:17 am

பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 4ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதன் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்காக சமந்தா சிலம்பம் கற்றுவருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி - பிப்ரவரியில் முடிவடையவுள்ளது. ஏப்ரலில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயனின் 12-வது படம். 

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துவருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் செப்டம்பர் 29 அன்று வெளிவருகிறது. இதற்கடுத்ததாக சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படம் வெளிவரவுள்ளது.

வேலைக்காரன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் தொலைக்காட்சி உரிமம் தொடர்பாகப் பல பிரச்னைகள் நிலவுகிறபோது சிவகார்த்தியேகன் அடுத்த இரு படங்களின் தொலைக்காட்சி உரிமைகளையும் இரு முன்னணித் தொலைக்காட்சிகள் பெற்றுள்ளது தமிழ்த் திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் வேலைக்காரன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பொன்ராம் படத்தின் படப்பிடிப்பே சமீபத்தில்தான் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் படங்களின் தொலைக்காட்சி உரிமைகளை வாங்கப் பெரிய போட்டி நடப்பது அவருடைய வளர்ச்சியைத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.