பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு: 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் காலா அப்டேட்! 

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி வரும் 'காலா'படத்தின்முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

News image
Updated On :28 ஜூன் 2017, 7:32 am

சென்னை: 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி வரும் 'காலா'படத்தின்முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கபாலி வெற்றியைத் தொடர்ந்து ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் அடுத்த படம் 'காலா' திருநெல்வேலியிலிருந்து மும்பைக்கு சென்று, அங்கு தாதாவாக வாழ்ந்த ஒருவரின் கதை என்று சொல்லப்படும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பானது கடந்த ஒரு மாதமாக மும்பையின் தாராவி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற்று வந்தது.முதலில் 12 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் அதன் பிறகு சென்னை திரும்பினார். சிறிது நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்து படக்குழு சென்னை திரும்புகிறது. இது தொடர்பாக படக்குழுவினைச் சேர்ந்த ஒருவர் கூறும் பொழுது, 'மும்பையில் படமாக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் வெளிப்புற படப்பிடிப்பு என்பதால், அங்கு சேரும் கூட்டத்தினை கட்டுப்படுத்தி காட்சிகளைப் படம் பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அத்துடன் படமாகும் காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகும் அபாயமும் இருந்தது என்று தெரிவித்தார்.

Story image

சென்னை திரும்பியதும் சிறிய ஓய்வுக்குப் பிறகு இங்கு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. இதற்காக பூந்தமல்லி அருகே மும்பையின் தாராவி போன்றே  செட்டுகள் மிகுந்த  பொருட்ச்செலவில் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.