நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் இந்த வாரத் தொடக்கத்தில் பெல்ஜியம் புறப்பட்டார். அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஹாலிவுட் திரைப்படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகீர்’(The Extraordinary Journey of the Fakir) ஷுட்டிங் பெல்ஜியத்தில் ஒரு மாதம் நடைபெறும், அதற்காகத்தான் தனுஷ் பெல்ஜியம் சென்றார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஞாயிறு அன்று விஐபி 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்சிக்குப் பிறகு தனுஷ் பெல்ஜியத்துப் புறப்பட்டார். ஆகஸ்ட் முதல் வாரம் வரையிலான படப்பிடிப்பை முடித்த பிறகு தான் வீடு திரும்புவார்.
ப்ரெஞ்சு நாவலான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர் ஹூ காட் டிராப்ட் இன் அன் ஐகியா கபோர்ட்’ என்ற' நாவலை தழுவி உருவாகி வரும் இந்த ஹாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதில் பெருமை கொள்வதாக தனுஷ் கூறியுள்ளார். இப்படத்தின் கதை தலைப்பைப் போலவே சுவாரஸ்யமானது.

அஜா ஒரு மேஜிக் நிபுணன். இந்தியாவில் அவனுக்கு கிடைத்ததெல்லாம் வறுமைதான். அவனுடைய அம்மா அவனை ஒரு ரகசிய நோக்கத்துக்காக பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஈஃபில் டவருக்கு அனுப்புகிறார். டாக்ஸி ட்ரைவர் ஒருவனுடன் ஏற்படும் திடீர் சண்டையால் அஜா, பாரிஸின் பிரம்மாண்டமான ஃபர்னிச்சர் கடையில் உள்ள ஒரு அலமாரிக்குள் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்கிறான்.
அந்த அலமாரி விற்பனையாகி உடனடியாக ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவை சுற்றி வருகிறது. இந்தப் பயணத்தில் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறான் அஜா. வாழ்க்கைப் பற்றிய புரிதல் அவனுக்கு விரிவடைகிறது. தான் கற்ற வித்தையான மேஜிக்கின் மீது நம்பிக்கை வைத்து வீடு திரும்புகிறானா அவனுக்கு பாரீஸில் என்ன ஆகிறது என்பது தான் இப்படத்தின் கதை.
தனுஷுடன் இணைந்து 'தி ஆர்டிஸ்ட்' திரைப்பட நாயகி பெர்னிஸ் பெஜோ, உமா துர்மான் மற்றும் அலெக்ஸஸாட்ரா தாத்ரியோ உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். கனடா இயக்குனர் கேன் ஸ்காட் இயக்குகிறார். இசையமைப்பாளர் நிகோலஸ் எரெரா தவிர அமித் திரிவேதி இரண்டு இந்திப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மே மாதம் மும்பையில் முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சமூக மாற்றத்துக்கான உன்னத பணி - ராமதாஸ்

புதுகையில் ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று திறப்பு

மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


