எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் ஹீரோயினாக வெற்றிக் கொடி கட்டியவர் நடிகை அம்பிகா. அவரது மகன் ராம் கேஷவ் விரைவில் திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் என்ற தகவலை அம்பிகா தெரிவித்தார்.
‘என்னுடைய மகன் நடிப்பதற்கு தயாராகி வருகிறான். தமிழ் அல்லது மலையாளத்தில் ஹீரோவாக அவனது முதல் படம் இருக்கும். இப்போதைக்கு இவ்வளவு விவரங்களை தான் சொல்ல முடியும் நிலையில் உள்ளேன்’ என்றார் அம்பிகா.
54 வயதான அம்பிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர். 1978-ல் வெளிவந்த 'சமயமாயில்லா போலும்’ எனும் மலையாளத் திரைப்படத்தில் 16 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் அம்பிகா.
மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் அதன் பிறகு நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் அதே காலகட்டத்தில் நடித்து பிஸி நடிகையாக திகழ்ந்தார். இயல்பான நடிப்பால் திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென்ற ஒரு இடத்தைப் பிடித்தார். 1980 மற்றும் 1990 -களில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருடன் சேர்ந்து நடித்தார். தற்போது அம்மா வேடங்களில் நடித்து வரும் அம்பிகா இதுவரை 200 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மகன் ராம் கேஷவிற்கு ஒரு சிறந்த அறிமுகத்தைத் தருவேன் என்றார் அம்பிகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சமூக மாற்றத்துக்கான உன்னத பணி - ராமதாஸ்

புதுகையில் ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று திறப்பு

மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


