அதிவேக 10 லட்சம் பார்வைகள்: அஜித்தின் விவேகம் படப் பாடல் சாதனை!
தமிழ்ப் பாடல்களில் மிக குறுகிய காலத்தில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட பாடல் என்கிற பெருமை...


சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் "விவேகம்.' இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இசை - அனிருத்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்வைவா பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. உடனே ரசிகர்கள் இந்தப் பாடலை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்ததால் இப்பாடல் யூடிபில் ஒரு சாதனை செய்துள்ளது.
இந்தப் பாடலுக்கு யூடியூபில் இதுவரை 10 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. தமிழ்ப் பாடல்களில் மிக குறுகிய காலத்தில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட பாடல் என்கிற பெருமை சர்வைவா பாடலுக்குக் கிடைத்துள்ளது. ஆலுமா டோலுமா போல இந்தப் பாடல் படத்தின் வெற்றிக்குப் பேருதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...